கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் வீடுகளில் தங்கியிருந்த கல்முனைப் பிரதேச மாணவர்கள் பயன்தரு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருவதனை அண்மைக்காலமாக ஊடங்களின் மூலமாக அறியமுடிகின்றது.
மருதமுனை அல்-மனார் மத்தியகல்லூரியின் தரம் 12 உயர்தர கணிதப்பிரிவு மாணவன் முகம்மட் இஸ்மாயில் பஸ்லான் கைகளை இயந்திரங்களில் தொடாமல் மனித அதிர்வலை மூலம் திரவத் தன்மையை கையில் பெறவும் அதேவேளை ஒரே நேரத்தில் தண்ணீரால் கைகளைக் கழுவிக் கொள்வதுக்குமான இயந்திரமொன்றைக் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கை கழுவும் போதுடெப்களையும் அதனோடுபொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களையும் மாறிமாறிப் பலரும் தொடுவதனால் கொரோனாதொற்றுக்கள் வேகமாகப் பரவ வாய்ப்புண்டு. எனினும் இவ் இயந்திரத்தின் மூலம் நூறுவீதபாதுகாப்பு இருப்பதாகக் கண்டுபிடிப்பாளர் முகம்மட் இஸ்மாயில் பஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
கைகழுவும் இயந்திரத்தின் பக்கத்தில் நின்றுகையினைகீழேவைக்கும் போதுகைகழுவும் திரவியம் வெளியாகின்றன. திரவியத்தைதேய்த்துமுடித்ததும் மீண்டும் நீர் உள்ளபகுதியில் கையினைவைக்கும் போதுநீர் வெளியேறுகின்றன.
இக் கண்டுபிடிப்பானது இம்மாணவனின் இரண்டாவதுகண்டுபிடிப்பாகும்.
வீட்டின் அறையினுள் நுழையும் போதுதமதுஉடலிலுள்ளஅலைத் தெறிப்பினால் அவ்வறையின் மின் குமிழ்கள் எரிவதும் வெளியேறும் போதுமின் குமிழ்கள் அணைவதுமானகண்டுபிடிப்பொன்றினையும் கடந்தசிலமாதங்களுக்குமுன் அவர் மேற்கொண்டிருந்தார். இரு கண்டுபிடிப்புக்களும் இன்று(8) ஊடகமயப்படுத்தப்பட்டன
தொடுகைமுறையிலிருந்துவிடுபட்டுஉடல் அதிர்வலையினால் கதிர்கள் மூலமாக இயந்திரங்களைஉபயோகிக்கும் இக் கண்டுபிடிப்பானதுகொரோனாபரவலுள்ள இக் காலகட்டத்தில் நாட்டுக்குபிரயோசனமளிக்கக் கூடியதாகும்.
சம்பந்தப்பட்டதரப்பினரின் உத்தாசை இருக்குமானால் இவ் இயந்திரத்தைப் பரவலாக்கவுள்ளாதாககண்டுபிடிப்பாளர் பஸ்லான் தெரிவித்தார்.
இவர் மருதமுயைச் சேர்ந்தவர்த்தகர் பக்கீர் தம்பிமுகம்மட் இஸ்மாயில்-அப்துல் றஹ்மான் றோசாஆகியோரின் மூத்தபுதல்வராவார்