பிணை முறி மோசடி தொடர்பில் பல உண்மைத் தகவல்கள் தன்னிடம் உள்ளன ரணில்!

ஜே.எப்.காமிலா பேகம்-

த்திய வங்கி பிணைமுறி மோசடிகள் பற்றிய பல தகவல்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதனை வெளியிட்டால் அரசாங்கத்திலுள்ள பலரும் தடம்புரண்டுவிடுவார்கள் என்றும் கூறினார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இப்படி தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்கள் முட்டாள்கள் என்று சொன்ன சஜித் பிரேமதாஸ இன்று அவரே வெளியேறியிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களுடைய வாக்குகளும் அதேபோல மத்தியஸ்தமான வாக்குகளும் கிடைத்திருக்காவிட்டால் பாரிய தோல்வியை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் டி.எஸ் சேனாநாயக்கவின் காலத்தைப்போல துளிர்விட ஆரம்பித்திருப்பதாகவும், விரைவில் அதிரடிகளைக் காண்பிக்கப் போவதாகவும், இழந்துபோன வாக்குகள் அத்தனையும் ஈர்த்துக்கொள்வதாகவும் ரணில் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -