ஸ்ரீலங்கா டெலிகொம் கல்முனை பிராந்தியத்தினால் மாபெரும் இரத்த தான நிகழ்வு கல்முனை டெலிகொம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் ஒழுங்கு இன்று (5)செய்யபட்டிருந்தது.
இதில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்களுடன் கல்முனை விஹாரை விகாராதிபதி உட்பட பல்வேறு விளையாட்டு கழகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களில் இருந்து பலரும் வருகை தந்து இவ் உயிர் காக்கும் உத்தம நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந் இரத்த தான நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினருக்கும் அத்துடன் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.