முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியூதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதன்படி வரும் திங்கட்கிழமை 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு சி.ஐ.டி அழைப்பு விடுத்துள்ளது.
அவரிடம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் பற்றிய வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.
அதேவேளை முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் அன்றைய தினம் 9.30 அளவில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கிறது.
அவரிடம் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனையில் நிகழ்ந்த மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.