சம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் மாஹிரின் வெற்றியை உறுதி செய்கிறது. சம்மாந்துறையில் பெரு வெற்றிக்கு தயாராகும் மயில்...


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை-

ம்மாந்துறை அரசியலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் நேரடிச் செல்வாக்கு 2008 ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. 2008 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.கவின் நேரடி உறுப்பினராக மு.மா.ச.உ மாஹிர் களம் கண்டார். அதற்கு முன்பு ஐ.தே.கவின் அரசியல் செயற்பாட்டாளராக இருந்திருந்தார். இத் தேர்தலிலும், இதற்கு பின்பு இடம்பெற்ற தேர்தல்களிலும் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் நேரடியாக களம் கண்ட, நேரடியாக களம் காணாத தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் பலத்தை அறிந்து முடியும். 

2008ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்..?

இத் தேர்தலில் சம்மாந்துறை சார்பாக தற்போதைய வேட்பாளர்களான மன்சூர், மாஹிர் ஆகிய இருவரும் களமிறங்கியிருந்தனர். 2008ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் மு.காவின் சார்பாக களமிறங்காது போயிருந்தாலும், அன்று மு.கா தேர்தல் கேட்டிருந்த ஐ.தே.கவிலேயே களமிறங்கியிருந்தார். இத் தேர்தலில் ஐ.தே.க சம்மாந்துறை மண்ணில் பெரும் எண்ணிக்கையான வாக்கை பெற்றிருந்தது. சம்மாந்துறை மக்களது வாக்குகள் இருவருக்கும் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தும் இருவரும் தோல்வியை தழுவி இருந்தனர். இதில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களம் கண்டிருந்தார். மு.காவானது சம்மாந்துறை மண்ணிலிருந்து பெரும் எண்ணிக்கையான வாக்கை பெற்றிருந்தது.

2010 பாராளுமன்ற தேர்தல்..?

இந்த தேர்தலில் மு.காவானது ஐ.தே.கவோடு இணைந்து களமிறங்கியிருந்தது. சம்மாந்துறை மக்களது மிக சொற்பளவான வாக்கையே மு.கா சார்பாக களமிறங்கிய மு.பா.உ மன்சூர் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து களம் கண்டிருந்த தற்போதைய தவிசாளர் நௌசாத் சம்மாந்துறையிலிருந்து பெரும் எண்ணிக்கையான வாக்கை பெற்றிருந்தார். இத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதியில் சு.க 28 252 வாக்குகளையும், ஐ.தே.கவானது 10 184 வாக்குகளையும் பெற்றிருந்தது. இது பெரு வீழ்ச்சியல்லவா?
இத் தேர்தலில் தற்போதைய தவிசாளர் நௌசாத்தால் வெற்றியீட்ட முடியாது என்பது தெளிவாக இருந்தும் மக்கள் அவருக்கே வாக்களித்திருந்தனர். அன்று தற்போதைய வேட்பாளர் மன்சூருக்கு சம்மாந்துறையிலிருந்து குறித்த எண்ணிக்கையான வாக்களித்தாலே வெற்றி பெற முடியும் என்ற நிலையிலும், இத் தேர்தலை மு.பா.உறுப்பினர் மன்சூர் தவிசாளர் என்ற அதிகாரத்தில் இருந்த நிலையிலும் எதிர்கொண்டிருந்தார் ( பதில் தவிசாளரை நியமித்து ) என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களமிறங்கியிருக்கவில்லை. மு.கா வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

2011ம் ஆண்டு பிரதேச சபை தேர்தல்..?
இந்த பிரதேச சபைத் தேர்தலில் மு.காவானது மரச் சின்னத்தில் களமிறங்கியிருந்தது. மு.பா.உறுப்பினர் மன்சூர் நேரடியாக களமிறங்கியிருந்தார். இந்த தேர்தலில் தற்போதை தவிசாளர் நௌசாதும், தே.காவும் இணைந்து களமிறங்கி சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றியிருந்தனர். மு.கா தோல்வியை சந்தித்திருந்தது. இத் தேர்தலில் மு.மா.ச.உறுப்பினர்

2012 மாகாண சபை தேர்தல்..?

இத் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளர்களான மு.பா.உ மன்சூரும், மு.மா.ச.உறுப்பினர் மாஹிரும் மு.கா சார்பாக மரச்சின்னத்தில் களமிறங்கியிருந்தனர். இத் தேர்தலில் சம்மாந்துறை மக்கள் மு.காவுக்கு பெரும் எண்ணிக்கையான வாக்கை அளித்திருத்தனர். சம்மாந்துறை தொகுதியில் மு.காவானது 25 611 வாக்குகளையும், சு.கவானது 12 610 வாக்குகளையும் பெற்றிருந்தது. இது பெரு உயர்ச்சியல்லவா?

இங்கு 2010 ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறியுள்ளதை அவதானிக்க முடியும். அதுவும் தனித்து மரச் சின்னத்தில் களமிறங்கி. நன்றாக சிந்தித்து பாருங்கள். 2008 சம்மாந்துறையில் பெரும் எண்ணிக்கையான வாக்கை எடுத்த மு.காவானது, 2012 ம் ஆண்டே பெரும் எண்ணிக்கையான வாக்கை எடுக்கின்றது. அதற்கிடையில் நடந்த இரு தேர்தல்களிலும் படு தோல்வியை தழுவியுள்ளது. இத் தேர்தலில் ஏனைய இரு தேர்தல்களை விட நடந்த மாற்றம் என்ன? இவ்விரு தேர்தல்களிலும் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களம் கண்டிருந்தார். அது தவிர்ந்து வேறு மாற்றமேதுமில்லை. இத் தேர்தலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களம் கண்டிருந்தார். மு.காவானது சம்மாந்துறை மண்ணிலிருந்து பெரும் எண்ணிக்கையான வாக்கை பெற்றிருந்தது.

2015 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்..?

இத் தேர்தலில் மு.காவானது யானைச் சின்னத்தில் களமிறங்கியிருந்தது. சம்மாந்துறையில் மு.பா.உ மன்சூர் களமிறங்கியிருந்தார். இத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு பெருமளவான வாக்களிக்கப்பட்ட போதும் மு.கா வேட்பாளர் மன்சூருக்கு மிகக் குறைந்தளவு வாக்கே சம்மாந்துறையில் அளிக்கப்பட்டிருந்தது. 2010ம் ஆண்டைய தேர்தல் முடிகளின் படி, ஒரு குறித்த எண்ணிக்கை வாக்கை மு.காவில் களமிறக்கிய நபருக்கு அளித்தால் வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நிறுவல் தெளிவாக இருந்த போதும் மக்கள் அதனை ஏற்றிருக்கவில்லை. தற்போதைய மு.காவின் வேட்பாளர் மன்சூர் அன்று மாகாண அமைச்சராக இருந்த நிலையில் இத் தேர்தலை எதிர்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அம்பாறையில் முதன் முதலாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருந்த மயில் கட்சியினர் பெரு வெற்றியை பெற்றிருந்தனர். சம்மாந்துறை தொகுதியில் தனித்து 14 033 வாக்குகளை பெற்றிருந்தனர். சம்மாந்துறை மயிலின் கோட்டையானதற்கும், அம்பாறையில் திடமான கால் ஊன்றுகைக்கும் சம்மாந்துறை மக்களது தேர்தல் முடிவுகளே பிரதான காரணமாக இருந்தது. இத் தேர்தலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களமிறங்கியிருக்கவில்லை. மு.கா வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

2018 ம் ஆண்டைய பிரதேச சபைத் தேர்தல்..?

இந்த தேர்தலில் மு.காவின் தவிசாளர் வேட்பாளராக மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களமிறங்கியிருந்தார் ( தவிசாளர் வேட்பாளராக மு.கா பகிரங்கமாக கூறாது போனாலும், மக்கள் அவ்வாறே கருதினர் ). இவரை எதிர்த்து தற்போதைய தவிசாளர் நௌசாத் மயிலில் களம் கண்டிருந்தார். அந் நேரத்தில் மயில் மிகப் பலமானதாகவும் இருந்தது. இதோடு சேர்த்து மு.மா.ச.உறுப்பினர் அமீர் டீ.எவும் நௌசாதை ஆதரித்திருந்தார். மு.மா.ச.உறுப்பினர் மாஹிரின் எதிரணி மிகப் பலமிக்கதாக இருந்தது ( 2011ம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் தற்போதைய வேட்பாளர் மன்சூர் எதிர்கொண்டிருந்த அணியை விட இது பலமான அணி என்பதில் யாருக்கும் மறுப்பிருக்காது ). எல்லோரும் மயில் மிக இலகுவாக சம்மாந்துறை சபையை கைப்பற்றும் என்றே நினைத்திருந்தனர். தேர்தல் முடிவுகளை பார்த்த போது மொத்த வாக்கு எண்ணிக்கையில் ஐ.தே.கவே ( மு.காவே ) கூடுதலான வாக்கை எடுத்திருந்தது. நன்றாக சிந்தியுங்கள், 2012 ஆண்டு சம்மாந்துறை மண்ணிலிருந்து பெருமளவான வாக்கை எடுத்த மு.காவானது, 2018ம் ஆண்டே மீண்டும் கூடுதலான வாக்கை எடுத்துள்ளது. இங்கு நடந்த மாற்றம் என்ன..? இத் தேர்தலில் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் களம் கண்டிருந்தார் என்பதை தவிர வேறு எதுமில்லை.
இந்த தேர்தல் முடிவுகளை வைத்து சிந்திக்கும் ஒருவரால் மு.மா.ச.உறுப்பினர் மாஹிர் நேரடியாக போட்டியிட்ட தேர்தல்களில் மாத்திரமே மு.காவினர் வாக்கை பெற்றுள்ளமையை தெளிவாக உணர முடியும். அப்படியானால், இதுவரை சம்மாந்துறையில் மு.காவை தாங்கி பிடித்து கொண்டிருந்தவர் யார் என்ற வினாவுக்கு எவ்வித சந்தேகமுமின்றி மு.மா.ச உறுப்பினர் மாஹிரை குறிப்பிட முடியும்.
இம் முறை மு.மா.ச உறுப்பினர் மாஹிர் மயிலில் களம் கண்டுள்ளார். மாஹிரின் தனிப்பட்ட செல்வாக்கும், சம்மாந்துறையில் மயிலுக்குமுள்ள செல்வாக்கும் சேர்ந்து சம்மாந்துறையில் மயில் தோகை விரித்தாடப் போகிறது என்பதில் ஐயமில்லை. இது நான் சொல்லவில்லை. சம்மாந்துறை மண்ணின் தேர்தல் முடிவுகள் அப்படித்தான் சொல்லியுள்ளன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -