நுவரெலியா மாவட்ட சுயேற்சை வேட்பாளரும் அமரர் சந்திரசேகரனின் புதழ்வியுமான அனுசியா சிவராஜா தெரிவிப்பு.
எனது தந்தையின் அரசியலை அவர் இறந்த பின்னரேயே நான் அறிந்து கொண்டேன். அதற்கு காரணம் எனது தந்தை இறந்த போது பலர் தலைவா! என்று அழைப்பதற்கு பதிலாக அண்ணா! தம்பி என்று உறவு முறை கூறிதான் அழைத்தார்கள.; ஆகவே ஆச்சரியப்பட்டேன் அதன் பின் தேடி பார்க்கும் போது தான் எனக்கு புறிந்தது.எனது தந்தை மலையக மக்களுக்காக செய்த சேவைகள் அனைத்தும் கட்சி வளர்க்கவோ தொழிற்சங்கம் வளர்க்கவோ செய்யவில்லை. தனது உறவுகளுக்கு செய்யும் சேவையாக கருதியே செய்திருக்கிறார் என்று. அன்று அவருடன் அடி உதை வாங்கி கட்சி வளர்த்த பலர் இன்று மலையக மக்கள் முன்னணியில் இல்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் அவர்கள் இன்று மாற்;று கட்சிகளில் போய் சேர்ந்துள்ளார்கள். என நுவரெலியா மாவட்ட சுயேற்சை வேட்பாளரும் அமரர் சந்திரசேகரனின் புதிழ்வியுமான அனுசியா சிவராஜா தெரிவித்தார்.
கொட்டகலை டிரேட்டன் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் நான் அரசியலுக்கு வந்த பின் எனக்கு ஞாபகத்தில் உள்ளவர்களையும்,எனது அப்பா வைத்திருந்த பெயர் பட்டியலில் உள்ளவர்களையும் சந்திக்க வேண்டும். என்று ஆசைப்பட்டேன.; அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்ததது மலையக மக்கள் முன்னணியின் கோட்டை என்று கருதப்படும் சாமிமலைக்கு சென்றேன.; அப்போது மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகால தலைவரை சந்தித்த போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். எனக்கு மலையக மக்கள் முன்னணி என்று காட்டுவதற்கு கூட ஒர் தலைவரும் இல்லை. நானும் இன்று மலையக மக்கள் முன்னணியில் இல்லை. இதற்கு காரணம் என்ன யார் யார் ஆரம்பகால தலைவர்கள் என்று கட்சி நடத்தியமே காரணம.; அதற்கு பின் நான் தீர்மானித்தேன் எனது தந்தை ஒட்டிய அரசியல் செய்ய வேண்டும். அறவணைப்பு அரசயில் தான் மிகவும் முக்கியம.; என்னதான் அரசியல் நடத்தினாலும் நாம் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்.அவர்களுக்கு பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.தீர்வு வழங்க முடிகிறதோ இல்லையோ, மக்களுக்கு ஆறுதலாவது சொல்ல வேண்டும்.அதனை செய்வதாக எனக்கு தெரியவில்லை.நீங்களும் எனது தந்தையும் உருவாக்கிய கட்சியினை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வதாக எனக்கு தோன்றுகிறது.இதன் காரணமாக மலையக மக்கள் மன்னணி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுதிய போதிலும், அதற்கு உடன் படாததன் காணரமாகவே நான் வெளியில் வந்தேன். இன்று அண்ட துண்டா கொடுத்து மக்களை சமாளிக்கும் அரசியல் களைய வேண்டும்,தொலை நோக்கு அரசியல் செய்ய வேண்டும். என்பதற்காகவே நான் இன்று இறங்கியிருக்கிறேன்.என்னிடம் எப்போதும் தற்காலிக தீர்வுகள் கிடையாது நிரந்தர தீர்வுகளையே பெற்றுக்கொடுப்பேன்.இன்று மலையகத்தில் படித்து விட்டு எத்தனையோ பேர் இருக்கிறார்கள.; ஆனால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடையாது. வேலைத்தளங்களும் இல்லலை. காணி என்றாலும் சரி வீடு என்றாலும் சரி,பாதை என்றாலும் சரி உரிமையுடன் பெற வேணடும்.சொந்த மண்ணில் மறியாதை ஏற்பட வேண்டும.; இன்றுள்ளவர்கள் படித்த மலையக இளைஞர்களை காட்டுவதில்லை. அவர்களை அனைவரையும் வெளியில் கொண்டுவர வேண்டும். அதற்காக நான் இந்த தேர்தலில் களமிறங்குகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.