தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட மூதூர் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அடுத்த வாரத்தில் தீவிரமாக இடம்பெறவுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான ச.குகதாசன் இன்று 9ம் திகதி ஊடகங்களுக்கத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்:
தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் வழிகாட்டலிலும் கோட்டக்கிளைகள் மற்றும் மூலக்கிளைகளின் முயற்சியால் தீவிரமாகாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் நகரம்,மற்றும் நகரமும் சூழலும் , தம்பலகாமம், குச்சவெளி , ஆகிய பிரதேசங்களில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று இதனைத் தொடரந்து எதிர்வரும் வாரத்தின் 13ம் திகதி மூதூர் கோட்டத்தின் சம்பூர் பிரச்சாரக் கூட்டம் மாலை 5.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. 14ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கிளிவெட்டியிலும் அன்று மாலை 5.00 மணியளவில் மூதூர் இருதயபுரத்திலும் இடம்பெறவுள்ளது.
15ம் திகதி புதன்கிழமை கிண்ணியா ஆலங்கேணியில் காலை 10 மணிக்கும் அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மூதூர் பள்ளிக்குடியிரப்பிலும் இடம்பெறவுள்ளது. 16ம் திகதி மூதூர் பாட்டாளி புரத்தில் காலை 10 மணிக்கும் மாலை மூதூர் கட்டைப்பறிச்சானிலும் இக் கூட்டங்கள் இடமபெறவுள்ளது
இவை மூதூர் தேர்தல் தொகுதிக்கான பெரிய கூட்டங்களாக கருதப்படும். இக் கூட்டங்களில் பொது மக்களும் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சம கால அரசியல் நிலை தொடரபான தெளிவான விளங்கங்களை பெறுவதோடு வேட்பாளர்களின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடரபாகவும் அறிந்து கொள்ள முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான ச.குகதாசன் தெரிவித்தார்.