கொரோனா நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இராணுவம் எமது வட பிரதேசத்தை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றது.எனவே இந்த தேர்தலில் இராணுவ ஆட்சியை அகற்றக்கூடிய வகையில் மக்கள் செயற்படவேண்டும்.
சிங்கள மக்களுக்கு ஒரு நிலைப்பாடு ஒன்று உள்ளது. எவன் ஒருவன் தமிழனை அடக்கி ஆள்கின்றானோ அவனுக்கு ஆதரவாகத்தான் அவர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.இன்று எமது நிலைப்பாடும் வேறுவிதமாக இருக்கின்றது.
இராணுவத்தினரின் அடாவடி மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர்.ன.இது என்ன தேவைக்காக இராணுவத்தினர் செய்கிறார்கள்.ஒரு ஊரடங்கு சட்டமும் இல்லை, கொரோனா பிரச்சினையும் இல்லை என தேர்தலுக்காக திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று ஒரு இராணுவ அடக்குமுறையில் மக்களை கொண்டு வந்து நிலைநிறுத்தியுள்ளது. எனவே இந்த அடக்குமுறை ஏற்றுக் கொள்ளக்கூடியதொன்றல்ல என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.