செய்த வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு மக்கள் அங்கிகாரம் தொடர்;ந்தும் இருக்க வேண்டும்.-முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
டந்த நாலரை ஆண்டு காலமாக நாங்கள் மலையகத்தில் பல அபிவிருத்தி வேலைகளை செய்து கொடுத்துள்ளோம்.மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.தனிவீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம்.பிரதேச சட்டங்களை மாற்றியுள்ளோம்,காணி உரிமை பெற்றுக்கொடுத்துள்ளோம் மலையக அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கியுள்ளோம்.காபட் வீதிகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்.எவரும் இது வரை செய்யாத எத்தனையோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம.; ஆகவே அந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும.; என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் நேற்று (28) உரையாற்றும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் 80 வருடம் அரசியலிலும் 50 வருடம் அமைச்சுப்பதவியிலும் இருந்து செய்யாதவர்கள் செய்த வேலைகளை கடந்த நாலரை ஆண்டு காலப்பகுதியில் செய்து கொடுத்துள்ளோம்.இன்று ஒரு சிலர் பெரிசூட்டில் வந்து இறங்கி வாக்கு கேட்பதை போல் நாங்கள் வாக்கு கேட்கவில்லை உங்களுக்கு சேவை செய்து விட்டே வாக்கு கேட்கிறோம்.எங்கள் கட்சி மலையகத்தில் உள்ள பெரிய கட்சி நாங்கள் ஒரு போதும் உங்களை விட்டு போகமாட்டோம்.மக்களும் எம்மை விட்டு போகமாட்டார்கள.; தேர்தலுக்கு பிறகும் நானும் இராதாகிருஸ்ணனும் தான் அமைச்சர்கள் ஆகவே கட்டாயம் எங்களுக்கு வாக்களியுங்கள் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவோம்.கடந்த அமைச்சரவையின் போது நான் 50 ரூபாவினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்த போது அதனை தடுத்து நிறுத்தியவர் அப்போது இருந்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர் இன்று யானை சின்னத்தில் போட்டியிடுகிறார் அவர் எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு மீண்டும் பாராளுமன்றம் வருவதற்கே முயற்சி செய்கிறார். ஆகவே மக்களுக்கு துரோகம் செய்த அவருக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -