பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் எதிர்வரும் 25 ம் திகதி- மருதபாண்டி ரமேஸ்வரன்

தலவாக்கலை பி.கேதீஸ்-

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் (18.6.2020) நடைபெற்றது. பெருந்தோட்டதுறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன, முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான இராஜதுரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபா வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அன்றையதினம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -