பெப்ரவரி மாதத்தில் தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண அட்டையில் உள்ள கட்டனத்துக்கு சமமான தொகையையே மாா்ச் , ஏப்ரல் , மே மாதத்தங்களுக்கும் செலுத்தவும்


அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில கொரோனா லொக் டவுன் காலத்தில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளா்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவணை அலகினை கணக்கிட முடியாது போனது. ஆகவே இறுதியாக இவ் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண அட்டையில் உள்ள கட்டனத்தைினையே சமமான தொகையையே மாா்ச் , ஏப்ரல் , மே மாதத்தங்களுக்கும் செலுத்தும் படி நீர்ப்பவாணையாளா்களை வேண்டுவதாக நீா்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவா் நிசாந்த ரணதுங்க தெரிவித்தாா்.
தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் தலைவா் நிசாந்த ரணதுங்க தலைமையில் ரத்மலானையில் உள்ள நீர்வழங்கல் வடிகலாமைப்புச் சபையின் தலைமைக் காரியாலாயத்தில் இன்று 21.05.2020 நடைபெற்ற செய்தியாளா் மாநாட்டிலேயே தலைவா் மேற்கண்டவாறு தெரிவிததாா்.
அவா் தொடா்ந்து அங்கு தகவல் தருகைகையில் -

இக் கட்டணங்கள் . கூடவோ,குறைவாக நீா்பாவனை செய்திருந்தால் அக் கட்டணங்கள் 6 மதாக் நீா்க்கட்டண கணக்கில் நிவா்த்திசெய்து தரப்படும். இதனால் தாமத் கட்டணம் அறவிடப்படுவதில்லை. சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியம் வருமானம் கிடைக்க வேண்டியது இம்மாதம் 1.35 பில்லியனே கிடைக்கப் பெற்றுள்ளது. ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. நீர் கட்டணம் சம்பந்தமாக பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணித்தியாலயமும் 1939 என்ற இலக்க தொலைபேசி தொடா்பு கொள்ளலாம். அல்லது நீர்கட்டண அட்டை சம்பந்தமாக எதிா்காலத்தில ஈமெயில் ஊடாக நீர்கட்டண பில்லைப் பெற்றுக் கொள்ள உங்களது ஈமெயில் முகவரியை . 0719399999 என்ற இலக்கத்திற்கு குருந்ததகவல் செய்ய முடியும்.
நீர் வழங்கள் சபைக்கு மாதாந்தம் 4.6 பில்லியம் ருபா வருமானம் கிடைத்து வரும் ஆனால் இம்மாதம் 1.52 பில்லியனே கிடைக்கப் பெற்றுள்ளது 3.4 பில்லியன் ருபா சபைக்கு வரவேண்டியுள்ளது. மேல் மாகணத்தில் ஆனேகமான தொழிற்சாலைகள் வீடுகள் அலுவலகங்கள் மூடியிருந்ததால் நீரைப் பெற்றுக் கொள்பவா்கள் குறைவாகவே கடந்த 2 மாதங்களில் காணப்பட்டனா்.

கொழும்பில் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த நிலத்தின் கீழ் உள்ள இரும்புக் குழாய்கள் அகற்றப்பட்டு மீள புதிய குழாய்கள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது. எதிா்காலத்தில் நீர்குழாய்களில் இருந்து மண்,கள் அழுக்குகள், மடிகள் கட்டமாக அகற்றப்பட்டு சுத்தமான நீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சபையின் . ஊழியா்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதிலும் உள்ள நீர்விநியோகத் திட்டங்கள் தொடா்ந்தும் நிர்மாணிக்கப்படும். சாதாரணமாக ஒரு வீட்டுக்கு உதாரணமாக 05 அலகுக்கு 235 ருபா சபைக்கு செலவாகின்றது. ஆனால் 106.92 ருபாவுக்கே சபை நீர் வழங்கி வருகின்றது. இதனால சபை 45வீதம் நஸ்டத்தை ஈடுசெய்கின்றது. என தலைவா் தெரிவித்தாா் இவ் ஊடக சந்திப்பில் சபையின் பொது முகாமையாளா் மற்றும் பிரதிப் பொதுமுகாமையாளா்களும் கலந்து கொண்டனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -