பிரதேச சபை ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.




எச்.எம்.எம்.பர்ஸான்-
கோ
றளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியின் வேண்டுகோளுக்கிணங்க கல்குடா உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் (FRDK) நிறுவனத்தினால் பிரதேச சபையில் சுகாதார மற்றும் திண்மக்கழிவகற்றல் பிரிவுகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வியாழக்கிழமை (14) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி, சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், FRDK நிறுவனத்தின் உறுப்பினர்களான வைத்தியர் எச்.எம்.ஹரீஸ், வைத்தியர் எம்.ஐ.எம். இல்ஹாம், உதவி சுங்க அத்தியட்சகர் எம்.எம். முர்சிதீன் மற்றும் எம்.பி.ஏ.பாயிஸ், கிராம உத்தியோகத்தர் எம்.எம். சாதாத், ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கிய FRDK நிறுவனத்தினருக்கு பிரதேச சபை நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -