அட்டன் குடாகமயில் வேண் லொறி மோதுண்டு விபத்து இருவர் படுகாயம்நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேணும் கொட்கலையிலிருந்து பொகவந்தலா நோக்கி சென்ற சிறிய ரக லொறியுமே 12/05 பிற்பகல் 03 மணியளவில் நோருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது

விபத்தினால் லொறியின் சாரதியும் லொறியில் சென்ற மற்றொருவருமே காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேணில் பயணித்த ஐவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர் 

அதிகவேகமாக சென்ற வேண் லொறியில் மோதுண்டுள்ளதாக தெரிவித்த அட்டன் பொலிஸார் வேணின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -