பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு விநியோகிப்பதற்காக ஆயுர்வேத மருத்துவ பொதிகள்..பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை மத்திய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் 33 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு விநியோகிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதி வழங்கும் நிகழ்வு இன்று 13 புதன்கிழமை மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதி வழங்கும் நிகழ்ச்சித் திட்ட வைத்தியர் டாக்டர் தேவதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் 33 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு விநியோகிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதி வழங்கும் நிகழ்ச்சித் திட்ட வைத்தியர் டாக்டர் தேவதாவினால் காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு வழங்கி வைக்கப்பட்ட குறித்த மருத்துவ பொதியில் 100 பக்கட் காணப்படுவதோடு ஒரு பக்கட்டை ஒருவர் 1 ஒரு கிழமைக்கு பாவிக்கமுடியும் எனவும் இதை பாவிப்பதன் மூலம் படிப் படியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -