கந்தளாய் பிரதேசத்தில் மினி சூராவளி காற்றினால் அறுபது வீடுகள் சேதம்.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூராவளி காற்றினால் அறுபது வீடுகள் சேதமடைந்துள்ளதாக கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க இன்று(19) தெரிவித்தார்.
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர,வட்டுக்கச்சி,மற்றும் ரஜவெவ போன்ற பகுதிகளில் திங்கள் கிழமை(18),மற்றும் செவ்வாய்கிழமை (19) அதிகாலை வேளைகளில் வீசிய கடும் சூறாவளி காற்றினால் அறுபது வீடுகள் கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இவை தொடர்பான சேதவிபரங்களை கணக்கெடுக்க அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதாகவும்,இக் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -