கொட்டகலை நகரில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு பாவனைக்குதவாத இறைச்சி மண்ணெண்ணையிட்டு அழிப்பு. பலருக்கு கடும் எச்சரிக்கை


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் கொட்டகலை சுகாததார பிரிவினர் இன்று (16) திகதி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன் போது இறைச்சிக் கடைகள் சோதனை செய்த போது சுகாதார பொநிமுறைகளை பின்பற்றாது உரிய முகக்கவசம் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆடைகள் இன்றி இருந்த பலரை கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் கடுமையான நிபந்தனைகளும் இதன் பொது சுகாதார அதிகாரிகளினால் விதிக்கப்பட்டன.
இந்த சுற்றி வளைப்பின் போது மனித பயன்பாடுக்கு உகந்த நிலையில் இல்லாத மாட்டிறைச்சி மண்ணெண்ணெய் இட்டு அழிக்கப்பட்டதுடன் இறைச்சி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் தங்களது விற்பனை நிலையங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வைத்துக்கொள்ள வேண்டும். என்றும், அவ்வாறு இல்லாத கடைகள் அனைத்துக்கும் எதிராக வழக்க தாக்கல் செய்யப்படும் என கொடட்கலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலினை தொடர்ந்து சுகாதார பிரிவினரால் வர்த்தக்த்தில் மற்றும் கொள்வனவில் ஈடுபடும் பொது மக்கள் பின்பற்ற பட வேண்டிய பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதனை கொட்டகலை நகரில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பின்பற்றுவதில்லை. என்று சுகாதார பிரிவினருக்கு கிடத்த முறைபாடுகளை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றி வளைப்பில் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து கொட்டகலை சுகாதர பரிசோதகர் எஸ்.சௌந்தரராகன் கருத்து தெரிவிக்;கையில்
கோவிட் 19 வைரஸ் பரவலினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனை இந்த வர்த்தகர் பின்பற்றப்படவில்லை. .இது குறித்து நாங்கள் கடுமையாக அவர்களை எச்சரித்துள்ளோம.; தொடர்ந்து அவ்வாறு இடம்பெறுமாயின் அவர்கள் அனைவருக்கும் எதிராக கட்டாயம் வழக்கு தொடுப்பதாகவும் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -