கந்தளாய் பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 70 குடும்பங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.


எப்.முபாரக் -
திருகோணமலை-கந்தளாய் பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 70 குடும்பங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி இன்று(10)வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர்களுடைய தனிமை படுத்தலுக்கான தினம் நிறைவுற்ற நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளரான கடற்படை சிப்பாய் கொரோனா என உறுதிப்படுத்தப்பட்டதை யடுத்து அவருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -