கொரோனாவும் பொதுமக்களும்

முர்ஷிட்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் மக்கள் நடமாட்டத்தினை வெகுவாக குறைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலயப்பொறுப்பதிகாரி கெட்டியாராச்சி தெரிவித்தார் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களும் சுகாதார சேவையினரும் மற்றும் மக்களுக்கு உணவுப்பொருட்களை வினியோகிப்பவர்களும் மருந்தகங்கள் வங்கிகள் என்பனவும் இயங்கி வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

ஆரச தனியார் போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு வருகின்ற ஊழியர்கள் மட்டும் வருகைதருவதற்காக அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் வினியோகிப்போருக்கு அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதும் போதனா வைத்தியசாலையில் கிளினிக் தொடந்துவந்த நோயாளர்களுக்கு உரியா நோயாளிகள் தங்களின் கிளினிக் இலக்கத்தினை அறிவித்து தங்களின் மருந்துகனை அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய சாலையின் பணிப்பாளல் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் அற்பணிப்பான சேவையினை பாராட்டவேண்டும் இரவு பகல் பாராது தொடர்ச்சியக தாங்கள் கடமைகளுக்காக வீதிக்கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர் பொதுமக்கள் கிறிக்கட் விளையாடிவருகின்றதாகவும் வீதி ஓரங்களில் கதிரைகளை போட்டுக்கொன் அயல் வீட்டாருடன் அளவலாவுவதும் விருந்து போடுவது தேவைக்கு இல்லாது வெளியில் உலாவுவது தடைசெய்யப்படவேண்டும் என ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
உண்மையில் தற்போது உலக நாட்டை ஆட்டிப்படைக்கின்ற கொரோனாவை முற்றாக நமது நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு சகல மக்களும் ஒத்துளைப்பு வழங்கி பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒவ்வரு தனி மனிதனும் ஆதரவு வழங்குவது மிகமிக அவசியமானது கொரோனாவின் கோரத்தினை குறைப்போம் கூடிவாழ்வோம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -