நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டிலுள்ள அரசுத்துறை தனியார் துறை மற்றும் சமூர்தி, வயோதிபர் கொடுப்பனவு. வேலை இல்லாதவர்களுக்கான என எல்லா கொடுப்பனவுகளும் அரசாங்கத்தினால் நிவாரணமாக பெற்றுக் கொடுக்கப்பட்ட போதிலும் இதுவரையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித கொடுப்பதும் பெற்றுக் கொடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது .
கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பெற்று தரப்படும் என்றும் அது மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் பத்தாம் திகதிமுதல் ஏப்ரல் 10-ஆம் திகதி முதல் வழங்கப்படும் என பல்வேறு திகதிகள் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் 1000 ரூபா சம்பள உயர்வு என்பது திகதிகள் மாத்திரம் எங்சியிருப்பதாக இருப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரு மான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இன்று ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தோட்டங்களில் வறட்சி காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லைஇதனால். தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஓரிரு நாட்கள் மாத்திரம் வேலை வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் போதிய சம்பளம் இன்றி வாழ்வாதாரப் பிரச்சினை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலங்கள் காலங்களில் அரசாங்கம் உட்பட பலர் 1000 ரூபா சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த போதிலும் அதுவும் கிடைக்கவில்லை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் கொரோனா நிவாரணத் திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினை நிறைவுபெறும் வரை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பாத்திரன விடம் பேசி இருப்பதாகவும் இது குறித்து அவர் அமைச்சரவையில் பேசி முடிவு எடுப்பதாகவும் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று அரசாங்கம் நிவாரண திட்டங்களை சரியான முறையில் முன்னெடுத்து வருகிறது இதனால் பொதுமக்கள் பாதிப்பின்றி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சித் தரப்பினர் தேர்தல் நடத்தக்கூடாது என கூறுகின்றனர் காரணம் அவர்கள் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நிவாரணம் விட்டுக் கொடுக்கவில்லை மாறாக பொதுமக்கள் பணத்தினை கொள்ளையடித்த காரணத்தினால் தற்போது தேர்தல் நடத்தினால் பொது ஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுவிடும். என்ற அச்சத்தில் இவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாது இவர்கள் வைரஸ் பரவலை காரணங்காட்டி தேர்தலை பிற்போட முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த 52 நாள் ஆட்சியின் போதும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது தேர்தலை நடத்த விடாது நீதிமன்றம் சென்று ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் மீண்டும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்படுத்திக்கொள்வது இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதேவேளை கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பொது மக்களின் உரிமைகள் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காத சுமந்திரன் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு அமைதியாக இருந்துவிட்டு அக்காலப்பகுதியில் எவ்வித சட்டதிட்டங்களையும் சுட்டிக்காட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தற்போது பாராளுமன்றம் கூட்டுவதற்கு சட்ட திட்டங்கள் ஏற்பாடு இருப்பதாக குறிப்பிடுவது அதைப்பற்றி அதிகமாக பேசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. அன்று பொதுமக்களுக்காக சட்ட திட்டங்களை காட்டாதவர் எவ்வாறு தற்போது இதனை பற்றி பேசுகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்
