நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 குடும்பங்களுக்கு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகம் உதவி



பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் (Covid 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய, பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் தனவந்தர்கள் அனைவரும் ஒன்றிணைத்து மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இவ் சமூக நேய பணிக்காக சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கிய பிரதேச செயலாளர். நற்பிட்டிமுனை 1,2,3 மற்றும் கல்முனை-IA இற்கு பொறுப்பான அனைத்து கிராம் சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஸ்ரீ கணேசராலய, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் நன்கொடையாளிகள் அனைவருக்கும் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -