இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது



க.கிஷாந்தன்
ரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறிய ரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதி பத்திரம் இன்மை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதான இவர்கள், நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றைய நபர் கொட்டகலைப் பகுதியை சேர்ந்தவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -