டயகம மற்றும் வட்டவளை பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் அனுமதி பத்திரiமின்றி சாரயம் மற்றும் பியர் விற்பனை ஈடுபட்ட 04 டயகம மற்றும் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆட்லா தோட்டத்தில் வீடு ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த பியர் மற்றும் கசிப்பு மது பானங்களுடன் இரு நபர்களை டயகம பொலிஸார் நேற்று (16) .இரவு கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து சுமார் 48 டின் பியர், 500 மில்லிலீற்றர் கசிப்பு,இரண்டு போத்தல் சாரயம் ஆகியன இதன் போது மீட்க்பட்டுள்ளன.
தற்போது மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதானால் குறித்த 500 மி;ல்லிலீற்றர் பியர் டின் ஒன்று 500 முதல் ஆயிரம் ரூபா வரை விற்கப்படுவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
இதே வேளை நேற்று இரவு (26) வட்டளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்வின் பகுதியில் வட்டவளை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7500 மில்லிலீற்றர் கோடா,மற்றும்,இரண்டு போத்தல் சாரயத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டில் மறைத்து வைத்து மிகவும்சூக்சுமான முறையில் மதுபானங்கள்; விற்பனை செய்துவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா நீதி மன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார். தெரிவித்தனர்