புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தனது மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பினூடாக சாய்ந்தமருது ,மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள சுமார் 1500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலமையில் அவரது இல்லத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வு 28.04.2020 செவ்வாய் கிழமை 29.04.2020 புதன்கிழமை என இரண்டு தினங்களாக இடம் பெற்றது.
இதில் இவ்வமைப்பில் உள்ள அனைத்து மகளிர்களும் கலந்து கொண்டதோடு எமது நாட்டில் நிலவும் கொரோனா நோய்த் தொற்று சூழ் நிலைக்கு மத்தியிலும் இவ்வாறான உதவியைச் செய்த எமது முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு நாங்கள் என்றும் உறுதுனையாக செயற்படுவோம் எனக் குறிப்பிட்டனர்.
இது விடயமாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் எதிர்காலத்தில் மகளிர்களுக்காக பல நலநோன்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த என்னியுள்ளேன். அத்தனையையும் இந்த மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பினூடாகவே செயற்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -