ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் நேற்றிரவு சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட குழுவினரை மடக்கிப் பிடித்த பொலிஸார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -