மாவட்டச்செயலாளர் புஸ்பகுமார தெரிவிப்பு.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-நுவரெலியா மாட்டத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலினை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்கள் பொலிஸார்,இரானும் மற்றும் சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்களை கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக மாவட்டத்திற்கு வெளியாட்கள் வருவதனை அத்தியவசிய பொருட்கள் கொண்டு வருபவர்கள் தவிர ஏனையவர்கள் வருவதனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. என நுவரெலியா வாட்ட செயலாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் கட்டுபடுத்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இன்று (03) தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நகரங்களுக்கிடையில் மக்கள் நடமாடுவதனை பொலிஸார் மற்றும் இரானுவத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தலவாக்கலை நகர மக்கள் நுவரெலியாவுக்கோ ஏனைய நகரங்களுக்கோ செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான வற்றை அருகில் உள்ள நகரத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே வேளை நகரங்களுக்கு மக்கள் வருவதனை தடுப்பதற்காக கிராம சேவகர் பிரிவுகளில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளோம்.அதற்காக கிராம சேகர் பிரவினை மூன்றாக பிரி;த்து கிராம சேவகரர் சமூரத்தி உத்தியோகஸ்த்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் ,ஆகியவர்களுக்கு ஒவ்வொரு பிரிவுகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் மருந்து பொருட்கள் ஆகியனற்றை அறிந்து
அவற்றினை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியவசிய பொருட்கள் பெற்றுக்கொள்வதற்காக கூட்டறவு விற்பனை நிலையங்கள்,சதோச விற்பனை நிலையங்கள்,பிரதேச செயலகங்களில் அத்தியவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.அவர்கள் அதனூடாக பெற்று கொள்வனவு செய்த விலைக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் நகரங்களுக்கு வர வேண்டிய தேவையில்லை.அதே நேரம் சமூர்த்தி பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படவுள்ள 10000 ரூபாவில் 5000 ரூபா வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது,அத்தோடு சமூத்தி கொடுப்பனவு மற்று முதியோர் கொடுப்பனவு விண்ணப்பித்து கிடைகாது பட்டடியல் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த பட்டியலில் அடங்காத சிலர் அதாவது தோட்டத்திலும் கிராமங்களிலும் இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.இவர்களின் வறுமை நிலையினை அறிந்து அவர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக பிரதேச ரீதியாக இவர்களை அடையாளப்படுத்த குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது இவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் மாதத்தில் மூன்று முறை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கா அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான தனது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிலிருந்து நிதியினை ஒதுக்கியுள்ளார். இந்த நிதியிலிருந்தும் தோட்ட நிர்வாகத்தின் நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.இது தற்போது தோட்ட வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கவலைக்குரிய விடயம் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கும் போது வசதி படைத்தவர்களும் இந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்ள வருகின்றனர்.தயவு செய்து நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டாண நிலையினை கருத்தில் கொண்டு நீங்கள் முடிந்த இந்த தருணத்தில் ஓரிரு குடும்பங்களுக்காவது உதவ முன்வர வேண்டு:ம்.அப்போது தான் நாம் இந்த சவாலினை வெற்றி கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.