விவசாயத் துறை அபிவிருத்தி முன்னேற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட விவசாயத்துறை சார் அபவிருத்தி திட்டமிடல் முன்னேற்றப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (16)மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

விவசாயத்துறையோடு தொடர்புடைய திணைக்களங்கள் ஒன்றுசேர்ந்து மாவட்ட விவசாய அபவிருத்தி தொடர்பான முன்னோக்கிய திட்டமிடலை தயாரிக்குமாறு உரிய திணைக்கள தலைவரிடம் அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டதுடன் விவசாயம்,உப உணவுற்பத்தி,வீட்டுத்தோட்டம்(செளபாக்யா),உரமானியம் உட்பட பல்துறைசார் விடயங்களின் சமகால நிலை தொடர்பிலும் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைபற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

செளபாக்யா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தற்போதுவரை 4000 விதை பக்கற்றுக்களும் 5500 மரக்கறி கன்றுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்(மாவட்ட)வருணி கருணாரத்ன தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எம்.ஏ.அனஸ் உட்பட துறைசார் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -