திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவில் நாட்டில் பரவிய கொவிட் 19 வைரஸினாலேற்பட்ட அசாதாரன நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 கொடுப்பனவுகளை பெற 12009 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் இவர்களுக்காக 60045000.00 ரூபா நிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்ஸா குமாரி இன்று(13) தெரிவித்தார்.
இவர்களுள் இதுவரை 9263 பயனாளிகளுக்கு 46315000.00 ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.அதன்படி முதியோர் கொடுப்பனவு பெறும் 983 பேருள் 909 பேரிற்கு 4545000.00ரூபாவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 422 முதியோர்களுள் 344 பேருக்கு 1720000 ரூபாவும் சிறுநீரக நோய் கொடுப்பனவு பெறும் 96 பேருள் 83 பேரிற்கு 415000.00 ரூபாவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிறுநீரக நோயாளிகள் 25பேருள் 20 பேரிற்கு 100000.00 ரூபாவும் விசேட தேவையுடையோர் கொடுப்பனவு பெறும் 133 பேருள் 121 பேரிற்கு 605000.00ரூபாவும் விசேட தேவையுடையோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 90 பேருள் 83 பேரிற்கு 415000.00ரூபாவும் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் 4744 பேருள் 4640 பேரிற்கு 23200000.00 ரூபாவும் சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள 5516 பேருள் 3063 பேரிற்கு 15315000.00 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
