24 மணித்தியாலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இனங்காணப்படவில்லை!


டந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இனங்காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், இன்று ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் மொத்தமாக 50 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 பேர் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 224 பேர் வைரஸ் தொற்று சந்தேகத்தில் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -