நாட்டில் அமுப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தளர்தப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் சுகாதார நலனை கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய சந்தை, வியாபார தளங்களுக்கு வருகைதந்த பொது மக்களுக்கும் மற்றும் முகக் கவசம் பயன்படுத்தாத வர்த்தகர்களுக்கும் இலவச முகக் கவசம் (மாஸ்க்) இன்று வினியோகிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் தலைமையில் முகக் கவசம்( மாஸ்க்) வினியோகம் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூகத் தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கொரோனா தொற்று நோய் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.