நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் நாளை புதன்கிழமை ஊரடங்கு சட்டம் தழுத்தப்படுவதை முன்னிட்ட கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம், கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள பஸ் தரிப்பு நிலையங்கள், பொதுச்சந்தை கட்டிடத்தொகுதி போன்ற பொது இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படட்து.
இதில் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.