ஜனாதிபதியின் செயல்பாடானது இன்று முழு இலங்கை மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நீதித்துறையின் அவ நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடாகும்-அ.நிதான்சன் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெவித்திருப்பதாவது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பானது நீதித்துறையின் சர்வதேச நாடுகளுக்கு அவநம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் முழு இலங்கையர்களுக்கும் அச்சுறுத்தலான நிறைவேற்று அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது.சிறுபான்மை சமூகம் அச்சத்தில் பல்வேறுபட்ட இன்னல்களை முகம்கொடுத்து யுத்த வடுக்களில் இருந்து மீண்டு வரும்போது மேலும் அச்ச உணர்வை அதிகரிக்கும் முகமாக சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவின் பொது மன்னிப்பு விவகாரம் காணப்படுகின்றது.இறந்தவர்கள் தமிழர்கள் சிறுபான்மை சமூகம் என்பதற்கு அப்பால் அவர்கள் இலங்கை நாட்டின் குடிமக்கள் இறந்தவர்களில் ஐந்து வயது குழந்தையும் அடங்குகின்றது.இவ்வாறு பொதுமன்னிப்பின் பெயரில் வெளிவந்த நபர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டது என்பது நீதித்துறையின் மீது நிறைவேற்றுத் துறை கொண்டுள்ள எதேச்சிகரமான ஆளுகை என வெளிப்படையாக தெரிகின்றது.
இலங்கை நீதித்துறையானது சுயாதீனமாக இயங்க முடியாத நிலையையும் உணரக்கூடியதாக உள்ளது.மேலும் ஒரு நாட்டின் நீதித்துறையே மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க காரணமாக அமைகின்றது.அவ்வாறு இருக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் இவ் வழக்குக்கான அரசின் செலவீனம்,நேரவிரயம்,சட்டத்துறையின் சேவை என்பன வீணடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான செயல் கண்டிக்கதக்கது எனக் குறிப்பிட்டார்
