முழு உலகமும் கொறோனா தொற்றுக்குள்ளாகி சிரமப்பட்டு கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஈரானின் ஏவலாளிகளாக செயல்படும் ஹோதி குழுவினரின் நாடுபிடிக்கும் வெறியாட்டத்தின் ஒரு அங்கமாக சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில், இரு மிஷேல் ஏவுகனைகளை ஏவி தாக்குதல் தொடுத்துள்ளமை குறித்து வன்மையாக கண்டிக்கிறேன் என இலங்கையின் தேசிய இன நல்லுறவுக்கான தலைவரும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கா ஆலோசகருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா ஊடகங்களூக்கு விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முழு உலகமும் நிர்கதியாகி தன்னை தன் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது, பொருளாதாரம் சீரழிந்துள்ளது, பசியால் மக்கள் வாடுகிறார்கள், கவனிக்க யாரும் இல்லை என்று நீண்டு செல்லும் சர்வதேசத்தின் பட்டியலுக்கு மத்தியில் ஈரான் இவ்வாறு மிலேச்சத்தனமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது அதன் உச்சகட்ட இழிநிலையையே இது பறைசாற்றுகிறது. இவ்வாறான கீழ்த்தரமான செயல்பாடுகளை முழு உலகமும் கண்டிக்க வேண்டும் எனவும் காட்டமாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்ற கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கவேண்டிய இந்த சந்தர்ப்பத்தில், ஹோதி குழுவினரின் சந்தர்ப்பவாத காட்டுமிராண்டித்தனம் அவர்களுக்கு வெற்றியைத்தரப்போவதில்லை என்றும் மாறாக மக்களின் வெறுப்பையும் வல்ல அல்லாஹ்வின் கோபப்பார்வையையுமே அவர்கள் மீது இறக்கிவிடும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -