ஹட்டனில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை போக்குவரத்து ஸ்தம்பிதம்.

ஹட்டன் கே.சந்தரலிங்கம்-
ரடங்கு சட்டம் இன்று (26) காலை தளர்த்தப்பட்டதளை தொடர்ந்து ஹட்டன் நகரில் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் காலை ஆறு மணி முதல் நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருப்பதனை காணக்கூடியதாக இருந்தன.
அதிகமான பொது மக்கள் மலையக நகரங்களுக்கு இன்று வருகை தந்தமையினால் பொது போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டன.
அதிகமான வரிசைகள் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் மருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கூடியிருந்தனர்.
இதே வேளை தனியார் மற்றும் அரச வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டன.
மலையக நகரங்களில் உள்ள எல்லா அத்தியவசிய பொருட்கள் விற்பனை கடைகளிலும் மருந்து கடைகளிலும் தீபாவளி நாட்கள் போல் காட்சியளித்தன.
சத்தோச விற்பனை நிலையங்களில் இன்று என்றுமில்லாத அளவு பாரிய வரிசை காணப்பட்டன.இந்த வரிசைகளை ஒழுங்கு படுத்துவதற்கு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தன.
சுகாதார அறிவுறுத்தல்களை பின் பற்றி பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் அதிகமானவர்கள் முகக்கவசமின்றியும் ஒரு மீற்றர் இடைவெளி பேணாமல் இருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தன.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பல மணித்தியாலங்கள் வரிசை நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள்,பெற்றோல் நிரப்பு நிலையங்கள்,போன்ற அனைத்திலும் இன்றைய தினம் பல மீற்றர் தூரத்திற்கு நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -