வெளிப்பிரதேசங்களில் இருந்து மலையக பகுதிகளுக்கு வருகைத்தந்துள்ளவர்கள் பொது வெளிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதர்கள் தெரிவிக்கின்றனர்
கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் தொழில்புரிந்த இளைஞர் யுவதிகள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்களென அறிய முடிகின்றது.
இந் நிலையில், இவ்வாறு வருகைத்தந்துள்ள இளைஞர் , யுவதிகளை நகரப்பகுதி மற்றும் பொது இடங்களுக்கு 14 நாட்களுக்கு செல்லாது வீடுகளில் இருக்குமாறு சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பல பகுதிகளில் விளையாட்டு மைதானங்களில் ஒன்று கூடி விளையாடுதல், நீர்த்தேக்க பகுதிகளில் மீன் பிடித்தல், நீர் வீழ்ச்சி பகுதிகளில் களியாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு வருவதாக பொது மக்களினால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே இவ்வாறு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து மலையக பகுதிகளுக்கு வருகைதந்தோர் பொது வெளிக்கு வருவதை தவிர்க்குமாறு சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.