அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் பணிக்குழு


கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவும் அபாயம் கூடிய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் தளர்த்தப்பட்ட வேளையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் வர்த்தக நிலையங்களில் பெருமளவில் கூடியமையினால், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்கு அது பாரிய அச்சுறுத்தலாக அமைந்ததாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்..

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்குமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதோஸ, கீல்ஸ், லாப்ஸ், ஆர்ப்பிக்கோ, புட்சிற்றி, அரலிய, நிப்புண மற்றும் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் இந்த செயற்பாட்டிற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குக் கொண்டுவந்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை வினைத்திறனாக செயற்படுத்த பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் A task force ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த படையணியின் உறுப்பினர்களாவர். அபாய வலயங்களான இனங்காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் மீள் அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும். உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், கேஸ் மற்றும் ஏனைய சேவைகள் தட்டுப்பாடின்றியும், தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் நாளையிலிருந்து ஆரம்பமாகிறது.

லொறி, வேன்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் பொருட்களை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் சகல வாகனங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வீதிகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -