தேசிய Muaithai குத்துச்சண்டை போட்டியில் Knock Out Muaithai Kahatowita கழக வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள்



எம்.ஆர்.லுதுபுள்ளாஹ், ரிஹ்மி ஹக்கீம் - கஹட்டோவிட்ட-
டந்த 3 தினங்களாக (8,9 & 10) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வந்த, தேசிய ரீதியிலான Muaithai குத்துச்சண்டை போட்டியில் கஹட்டோவிட்டவில் இயங்கி வரும் Knock Out Muaithai Kahatowita கழகத்தில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டித் தொடரில் இலங்கை கடற்படை கழகம், இலங்கை இராணுவ படை கழகம், IMA, Sit ravana muaithai போன்ற பிரபல கழகங்கள் போட்டியிட்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட கஹட்டோவிட்ட வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி பல பதக்கங்களை ஊருக்கு பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுள் தங்கப்பதக்கத்தை மொஹம்மத் ராயில் அவர்களும்,வெள்ளி பதக்கத்தை மிஷ்காத் ரிவியாஸ்,மொஹம்மத் யூசுப்,மொஹம்மத் அம்ரி போன்றவர்களும் பெற்றுக்கொண்டதுடன் வெண்கலப்பதக்கத்தை மொஹம்மத் ஸாத் மற்றும் எம்.ஐ.முபஸ்ஸிர் போன்றவர்களும் பெற்றுக்கொடுத்து தனது கழகத்துக்கும், ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர்.
முதன்முறையாக கலந்து கொண்ட கஹட்டோவிட்ட வீரர்கள் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி நல்ல முறையில் திறமைகளை வெளிப்படுத்தி பல பதக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இந்த வகுப்பின் மாஸ்டராக கஹட்டோவிட்டவை சேர்ந்த சகோதரர் முஆத் அவர்கள் கஹட்டோவிட்ட Muaithai கழகத்தை சிறப்புடன் வழிநடாத்தி போதுமான பயிற்சிகளை வழங்கி வருகின்றமை சிறப்பம்சமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -