கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு வெகு விமர்சையாக ஆரம்பம்

எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில்
வெகு விமர்சையாக (11.02.2020) இன்று
பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் பேன்ட் வாத்திய குழுவினரால் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் தேசிய கோடி ,பாடசாலைகோடி , இல்லங்களின், கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் கலந்து கொண்டதுடன் மற்றும் வலய கல்வி அதிகாரிகள் , பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், பாடசாலை அதிபர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழுவினர்,பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,நலன் விரும்பிகள் ,பெற்றோர்கள்,மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் அணி வகுப்பு, மற்றும் சபா,மர்வா, ஹிரா ,அரபா ஆகிய நான்கு இல்லங்களில் அறிமுகம் என்பன இடம்பெற்றது.

இவ் போட்டியானது தேசிய ரீதியில் போட்டிகள் எவ்வாறு தரம் வாய்ந்ததாய்
ஒழுங்கமைக்கபடுமோ அதே போன்று சிறந்த தரத்தில் இல்ல விளையாட்டு போட்டிகள் ஏற்ப்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 21.02.2020 திகதி இடம்பெறவுள்ளது.

மேலும் இல்ல விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிக்க பாடசாலை அபிவிருத்தி சபையினர், பழைய மாணவர்கள் மற்றும் பிராந்திய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -