கொரோனாவுக்கு சூட்டப்பட்ட பெயர்.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரசால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் குடித்த நோய்க்கு கோவிட் 19 ( COVID-19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது:-
புதிய நோய்க்கு கோவிட்-19' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லையென்றும் , அதேவேளையில் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளதாகவும், சி, ஓ,வி, ஐ, டீ ( C ,O ,V ,I ,D ) என்ற இந்தப் பெயரில் சி ஓ ( C ,O ) என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ ( V,I ) என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ ( D ) என்பது டிசீஸ் ( Disease ) எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும், கொரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -