" கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முழு வசதிகளையும் கொண்ட இரு தமிழ்ப் பாடசாலைகள் உதயமாகவேண்டும்" - வேலுகுமார் எம்.பி.

“கண்டி மாவட்டத்துக்கு முழுமையான வசதிகளைக்கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்றின் தேவை நீண்டகாலமாக இருந்துவருகின்றது. இதற்கு எமது ஆட்சியில் அடித்தளமிடப்பட்டது. எனவே, இந்த ஆட்சியில் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

கண்டி திகன , மாபெரிதென்ன, நித்துலேமட, செனரத்வௌ ஆகிய கிராமங்களை உள்ளடக்கி மூன்றாவது முறையாகவும் போகஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (08.02.2020) நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இக்கிராமங்களில் பல இனங்களை, பல மதங்களை, பல கலாச்சாரங்களை சேர்ந்தர்வர்கள் வாழ்கின்றனர். எனவே, இப்படியான நிகழ்வுகள் இம்மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கும், சக வாழ்வுக்கும் அடிப்படையாக அமைகின்றன. அத்துடன், சமூகங்களுக்கிடையில் தமது கலாச்சாரங்களை, பண்பாடுகளை பரிமாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கான முழு வசதிகளை கொண்ட தமிழ் பாடசாலை ஒன்றின் தேவை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. எமது அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்திலும் அத்தகைய இரு பாடசாலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்கமைய பாடசாலை அமைப்பதற்காக, கண்டி, மாபெரிதென்ன பண்ணையில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தை பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அவ்வாறு உருவாகும் பாடசாலை தங்கும் இட வசதிகளுடன் கூடியதாக காணப்படும். நாங்கள் அதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இன்றைய அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொண்டு இப் பாடசாலை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என்றும் வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -