இன்று காரைதீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப்பெரியார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எனலாம்.

அவரதுதிருக்குறள் மொழி இனம்நாடுகடந்து முக்காலத்திற்கும் ஏற்ற தத்துவநூலாகும். இதனால் இதனை உலகப்பொதுமறை என்று அழைப்பர்.

சுருக்கமாகக்கூறினால் இதில் 42194 எழுத்துக்கள் 14000 சொற்கள் 1330 குறட்பாக்கள் 133அதிகாரங்கள் 3 பிரிவுகள் என்பனஅடங்குகின்றன.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று தொடங்கிஇ ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் 'திருக்குறள்' என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்இ திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்துஇ உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்
வாழ்வின் ஒளி விளக்காகத்திகழும் திருக்குறள் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும்கிடைத்தஅரியகருவூலமாகும். வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத கருத்துக்கள் அனைத்தையும் திருவள்ளுவரைப்போல் உணர்த்தியவர்கள் உலகில் யாரும் இல்லை எனலாம்.

தனிமனித ஒழுக்கத்தையும் பொது ஒழுக்கத்தையும் அறத்துடன் கூறியது திருக்குறள் ஒன்றே என பேரறிஞர் அல்பேர்ட் சுவிட்சர் கூறியுள்ளார்.

அத்தகைய தமிழறிஞருக்கு உலகெங்கும் 300 சிலைகளைஅமைப்பதேதனது வாழ்வின் இலட்சியமென்கிறார் இந்தியதமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளைநிறுவுனர் உடையார் கோயில்குணா அவர்கள்.

அவர் வழங்கிய திருவள்ளுவர் கற்சிலை இன்று வெள்ளிக்கிழமை உலகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார் அவதரித்த காரைதீவு மண்பதியில் நிறுவப்படவிருக்கிறது.

இன்று சிலைதிறப்புவிழா.

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவச்சிலை திறப்புவிழா காரைதீவில் இன்று (28) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவிருக்கிறது.

காரைதீவு பிரதேசசபை வளாகத்தில் இன்று காலை 9மணியளவில் பிரதேசசபைத்தவிசாளரும் சிலைநிறுவும் குழுவின் தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.
இ.கி.மிசன் மட்டு.மாநில உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் ஜீ மஹராஜ் திருவுருவச்சிலையைத் திறந்துவைக்கவிருக்கிறார்.

விழாவிற்கு பிரதம அதிதியாக திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் முதன்மை அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் ஆன்மீகஅதிதிகள் கௌரவ அதிதிகள் சிறப்பு அதிதிகள் விசேட அதிதிகள் உள்ளக அதிதிகள் என பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிலை நிறுவுதலையொட்டி எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜாவை ஆசிரியராகக்கொண்ட மலர்க்குழு தயாரித்த 'வள்ளுவனார் படிவ மலர்' என்று சிறப்பு மலரும் வெளியிட்டுவைக்கப்படவிருக்கிறது.
கடந்தவாரம் 21ம் 22ம் 23ம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரண்டாவது உலகதிருக்குறள் மாநாட்டை நினைவுகூருமுகமாக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இச்சிலையை இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர் செம்மொழிப்போராளி உடையார்கோயில் குணா காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு அன்பளிப்புச் செய்தார்.
அச்சிலை தாங்கிய ரதபவனி கடந்த இருதினங்களாக அம்பாறைமாவட்ட மெங்கும் பவனிவந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவள்ளுவருக்கு மாலைசூட்டி மலரஞ்சலி செலுத்தினார்கள். 

சிலைநிறுவும்குழுச் செயலாளர் கு.ஜெயராஜி தலைமையி;லான குழுவினரின் பங்களிப்பு இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.

திருக்குறள் மகிமை.

' கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் '


பொய்யாமொழிப்புலவரின் முப்பால் நூலான திருக்குறளுக்கு தமிழறிஞர் இடைக்காடர் சூட்டிய புகழாரம் இது.

அத்துணை சிறப்புவாய்ந்த உத்தரவேதமாம் திருக்குறளை இவ்வையகத்திற்கு அளித்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவ கற்சிலை நிறுவுவதையிட்டு பலரும் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.

'தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர் '
தெய்வப்புலவரின் உலகப்பொதுமறையாம் திருக்குறளுக்கு ஒளவைப்பிராட்டியாhர் சூட்டிய புகழாரம் இது.

காரைதீவில் வள்ளுவன் சிலை நிறுவல் என்பது ஒரு வரலாறு . அதற்கு மூலவிசையாக அடிநாதமாகத்திகழ்ந்தவர் காரைதீவின் முதல்வர் இளம் தவிசாளர் கௌரவ கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள்.

உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்துஇ உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.

இவர் உலக மக்களால்இ 'தெய்வப்புலவர்'இ 'பொய்யில் புலவர்'இ 'நாயனார்'இ 'தேவர்'இ 'செந்நாப்போதர்'இ 'பெருநாவலர்'இ 'பொய்யாமொழிப் புலவர்' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

அவர் எழுதிய திருக்குறள்இ வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம்இ மொழிஇ பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால்இ திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை'இ 'முப்பால்'இ 'ஈரடி நூல்'இ 'உத்தரவேதம்'இ 'தெய்வநூல்'இ 'பொதுமறை'இ 'பொய்யாமொழி'இ 'வாயுறை வாழ்த்து'இ 'தமிழ் மறை'இ 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

திருக்குறளை எழுதிஇ உலக இலக்கிய அரங்கில்இ தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளிஇ திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள்இ உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறிஇ தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. 

இந்நூல்இ சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும்இ வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம்இ மொழிஇ பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால்இ திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை'இ 'முப்பால்'இ 'ஈரடி நூல்'இ 'உத்தரவேதம்'இ 'தெய்வநூல்'இ 'பொதுமறை'இ 'பொய்யாமொழி'இ 'வாயுறை வாழ்த்து'இ 'தமிழ் மறை'இ 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

சிலகுறள்கள்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற குறள் இந்த உலகத்திலே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால் வானில் உறைகின்ற தெய்வத்திற்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்பதனை உணர்த்துகிறது.
'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு' என்ற குறள் பொருள் செல்வத்தை தேடுவதை வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றாகக் கருதிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனையும் பொருள்சார் விழப்புணர்வு அவசியம் என்பதனையும் பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்க்கையும் அறத்தின்பால் செல்லாத அருள் இல்லார்க்கு அவ்வுலக வாழ்க்கையும் இல்லை என்பதனையும் உணர்த்துகிறது.

அதேபோல 'இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என்ற குறளடி ஏழைகள் அவமதிப்பிற்குரியவராக இல்லாத போதும் செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும் இல்லாதோரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பாக இருப்பதால் அனைத்து மக்களையுமே செல்வத்தைத் தேடத் தூண்டியுள்ளார் வள்ளுவர்.

நல்லொழுக்கத்தின் பயனை ' நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்' எனவும் மற்றொரு உயிருக்கு வரும் துன்பத்தை தனக்கு வந்த துன்பம் போல கருதாவிட்டால் ஒருவன் பெற்றுள்ள அறிவால் வரும் பயன் யாது? என்பதனை ' அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சிலை கையளிப்பு!

இன்று திறந்துவைக்கப்படும் சிலை இந்தியா தமிழ்நாட்டில் ஊர்வலமாக எடுத்துச்சென்ற நிகழ்விற்கு காரைதீவிலிருந்து தவிசாளர் கே.ஜெயசிறில் சென்று பங்கேற்றிருந்தார். அங்கு அமைச்சரால் சிலைகையளிக்கப்பட்டது.

உலகப்பொதுமறைதந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவ கற்சிலையை இந்தியா தமிழ்நாட்டின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ம.பா.க.பாண்டியராசன் சம்பிரதாயபூர்வமாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கிவைத்திருந்தார்.

தமிழ்நாடு திருச்சியில் தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர் உடையார்கோயில் குணா தலைமையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான அந்தநிகழ்வு நடைபெற்றது.

அங்கு இடம்பெற்ற எளிமையான இந்நிகழ்வில் பல பேராளர்கள் பங்கேற்றனர்.அங்கு வள்ளுவப்பெருமான் சிலைகளுக்கு விசேடபூஜை சொற்பொழிவு இடம்பெற்றபின்னர் அமைச்சர் பாண்டியராசன் ஊடகங்கள் முன்னிலையில் கருத்துத்தெரிவித்து சம்பிரதாயபூர்வமாக சிலையை தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் கையளித்தார்.

அதற்கு முன்பதாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் இரண்டு சிலைகள் தாங்கிய 6நாள் ஊர்வலம் கடந்த மாதம் இந்தியாவில் கன்னியாகுமரி தொடக்கம் சென்னை வரை 2452கிலோமீற்றர்தூரம் இடம்பெற்றது. பின்பு அக்கற்சிலைகள் கப்பலில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது.

யாழில் சிலை.

யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில் கடந்த21ம் 22ம் 23ம் திகதிகளில்நடைபெற்ற இரண்டாவது உலகதிருக்குறள்மாநாட்டுமண்டபம்( கைலாசபதிஅரங்கு) முன்பாக வைக்கப்பட்டன. சிலைகளுக்கு அங்குவருகைதந்த பன்னாட்டுப் பேராளர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

அங்கு காரைதீவு மண்ணிலிருந்து 03 வாகனங்களில் யாழ். சென்ற சிலைநிறுவும் குழுவினர் தமிழர்பண்பாட்டுடையில் வள்ளுவர் படம்பொறித்த அழகான மாலைகள்சகிதம்கலந்துகொண்டமை பலரதும் கவனத்தையும்ஈர்த்தது எனலாம். அந்தமாலைகளைஇந்திய தமிழர்களுக்கும் வழங்கியமை மற்றுமொரு நிகழ்வாகும்.

அங்கு காரைதீவுக்கான சிலையை இந்திய துணைத்தூதுவர்ச.பாலச்சந்திரன் மற்றும் வடமாகணஆளுநரின் செயலாளர்சி.சத்தியசீலன் ஆகியோர் இருவேறு தினங்களில் சம்பிரதாயபூர்வமாகவும் உத்தியோகபூர்வமாகவும் தவிசாளர் கே.ஜெயசிறில் அவர்களிடம் கையளித்தனர்.

அந்த வள்ளுவன் சிலைஇன்று திறந்துவைக்கப்படுகிறது. திறப்புவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துவோம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
சிலை நிறுவும் குழு இணைப்பாளர்
காரைதீவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -