ஹட்டன் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு பொது மக்கள் விசனம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்
ண்மைக்காலமாக ஹட்டன் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நேற்று (08) திகதி மாலை ஹட்டன் சுற்றவட்ட பகுதியில் அமைந்துள்ள பாமசி ஒனறில் பெண் ஒருவரிடமிருந்து சுமார் 30.000 ரூபா பணம் திருட்டு போய் உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
போகவந்தலாவi பகுதியை சேரந்த குறித்த பெண் வங்கி ஒன்றில் சுமார் 30.000 ரூபாவை கடனாக பெற்று விட்டு மருந்து கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் சுற்றுவட்ட பகுதியில் உள்ள பாமசி (மருந்தகம்) ஒன்றில் மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது தனது கைபையில் இருந்து ஆயிரம் ரூபாவை எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் தனது கைபையில் மருந்தினை வைக்கும் போது பணத்தினை காணவில்லை. என முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை ஹட்டன் இந்து மா சபை பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு வேளையில் திருட்டு கும்பல் ஒன்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த துவிசக்கர வண்டிகள் பல களவு போய் உள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. என்றும் இது குறித்து பிரதேசத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா காட்சிகளில் பதிவாகியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
போன்று கடந்த (01.02.2020) வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்; வட்டவளை லஸ்ஸன ஹோட்டலுக்கு உட்பிரவேசிக்கும் வளைவு பகுதியில் வெகன் ஆர்; காரில் வந்த கொள்ளை கும்பல் ஒன்று 448600 கூரிய கத்தியொன்றினை காட்டி கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
குறித்த சம்பவத் தொடர்பாக தெரிய வருவதாவுது வேயங்கொடை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை நிலைய கடை ஒன்றில் மரக்கறிகளை விற்பனை செய்து விட்டு லொறியின் உதவியாளருடன் மீண்டும் ரேந்தபொலை பகுதியை நோக்கி அவிசாவலை ஹட்டன் வீதி ஊடாக வந்து கொண்டிருக்கும் போது பின் தொடர்ந்து வந்த வெகன் ஆர் ரக கார் ஒன்றில் வந்த ஐந்து லொறியினை முந்தி வழி மறித்தாகவும் அதில் இருந்து ஐந்து பேர் இருந்தாகவும், இரண்டு பேர் கத்தியனை கொண்டு காட்டி மிரட்டி பணத்தினை எடுத்து கொண்டு ஹட்டன் பகுதியை நோக்கி சென்றதாகவும்; முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது காரின் இலக்கத்தினை குறித்த முறைபாட்டு நபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
குறித்த காரியினையும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் கைது செய்ய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவி;க்கப்படுவதுடன்.
சம்பவம் குறித்து பிரதேசத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன்; விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கினிகத்தேனை பொகவந்தலாவை உள்ளிட்டு பல சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் எனினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமது உடமைகள் தொடர்பாக மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும.; என பொது மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -