பதிவிற்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உதய கம்பன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியும் இவற்றில் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழுவினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் பதிவிற்காக விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளின் தகுதிகளைப் பரிசீலனை செய்து, அதன் பின்னர் பதிவு செய்யப்படவுள்ளன.
இந்தக் காலத்திற்குள் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என்றும், ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.