ஒலுவில் கிராம மக்கள் பெருமிதம்.
சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் இன்று (29) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பதவி வகித்த கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் அவர்களின் பதவிக் காலம் நேற்றுடன்; முடிவடைந்ததையடுத்து யூ.எல்.ஏ.மஜீட் போட்டிகள் எதுவுமின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாக வெளியேறிய இவர், நுவான் கடலுணவு தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவும் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சில் விஞ்ஞான தொழில்நுட்ப அதிகாரியாகவும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) ஆகவும் இலங்கை வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக அயராது செயற்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட இவர், எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஏ.எம்.பாத்தும்மா ஆகியோரின் புதல்வாராவார். பல்கலைக்கழக வராலாற்றில் ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக முக்கிஸ்தர் ஒருவர் தெரவித்தார்.
பல்கலை;க்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இப்பீடத்தின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.