சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட கூட்டம் (30) நேற்று வியாழக்கிழமை மாலை தலைவர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இங்கு போரத்தின் எதிர்கால முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட முக்கிய தீர்மானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் எடுக்கப்பட்டதுடன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள எமது அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இந்நிகழ்வு மாளிகைக்காடு பிரதான வீதியிலிருந்து மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபம் வரையில் பண்டைய இஸ்லாமிய கலாச்சார முறையான பொல்லடி, றபான்இசைக்கப்பட்டு அதிதிகள்கெளரவிக்கப்பட்டு ஊர்வலமாக பாவா றோயலி மண்டபம் வரை அழைத்து வரப்பட உள்ளனர்.
இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் சகல அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
சிலோன் மீடியா போரத்தின் உயர் பீட அங்கத்தவர்கள் தொடர்ந்து மூன்று கூட்டத்திற்கு தொடர்ச்சியாக வருகை தராத விடத்து, அவர்களது அங்கத்துவம் உயர் பீடத்தில் இருந்து நீக்கப்படும்.
அது போன்று எதிர்காலத்தில் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கான ஊடக பயணம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் பயணிக்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதுபோன்று போரத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 4 ஆம் திகதி நாட்டின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதால் அந்நிகழ்வில் அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ளல் வேண்டும் என்பது குறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


