கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்ட அட்டன் கல்வி வலயத்தின் களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட தரம் 6 தொடக்கம் 11 வரை கல்வி பயிலும் ஆண், பெண் 41 மாணவர்கள் 31.01.2020 அன்று கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை விளையாட்டு போட்டியின் போது பணிஸ் உட்கொண்டதுடன் மைதானத்திலுள்ள கிணற்று நீரையும் பருகியுள்ளனர்.
இதன் பின்னரே இவ்வாறு உணவு ஒவ்வாமைக்கு உள்ளாகியிருப்பதாகவும், இவர்களில் இது வரை 39 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் இரண்டு மாணவிகள் மாத்திரம் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஏனையவர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்களும், கினிகத்தேனை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.