கல்முனை பொலிஸ் நிலையத்தின் வருட இறுதி பொலிஸ் பரிசோதனை

ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தின் வருட இறுதி பொலிஸ் பரிசோதனை நேற்று காலை (29) கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித்த பிரியந்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேகாரோக்கியம், மற்றும் பொதுமக்களுக்கு சேவைவழங்கும் பொலிஸ் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளும் இதன்போது பரிசோதிக்கப்பட்டன.

இதில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எச்.பிரதிப் குமார உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -