நற்பிட்டிமுனையில் முதற்கட்ட நீர் வடிகால் அமைக்கும் பணி ஆரம்பம்

பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் கழிவு நீர் துரிதமாக வடிந்தோடும் பொருட்டு புதிதாக நீர் வடிந்தோடும் கால்வாய்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக குறித்த நீர் வடிந்தோடும் கால்வாய்கள் அமைப்பதற்காக தற்போது வீதியின் இரு மருங்கிலும் கனரக வாகனத்தின் உதவியுடன் அபிவிருத்தி வேலைபணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல் றபீக் பார்வையிட்டதுடன் மேலும் முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் மழை காரணமாக குறித்த பிரதேசத்தில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான கால்வாய் வசதி இன்மை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -