உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை-அனந்தி சொல்வது உண்மையில்லை


பாறுக் ஷிஹான்-
ண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சொல்வது உண்மையில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை(31) இடம்பெற்ற பின்னர் வட மாகாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்ட தனது கருத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும்போது போராளிகளை வழிநடத்திய தளபதியாக இருந்த கருணா அம்மான் வழியில் உல்லாசமாக இருக்கின்றார் போராடிய போராளிகள் உள்ளே இருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார் இந்தக் கருத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

அனந்தி சசிதரன் அவர்களும் ஒரு போராளியாக இருந்தவர் அவரும் தற்போது வெழியில் தான் இருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் யுத்தத்திலே கிட்டத்தட்ட 12 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்தார்கள் அவர்கள் அனைவரது விடுதலையும் அன்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேசி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் .தற்போது சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் உண்மையிலே உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தவர்களும் ஆதரவு அளித்தவர்களுமே சிறையில் இருக்கின்றனர் அவர்களையும் படிப்படியாக விடுவிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்திருக்கிறார் என'பதை கூற விரும்புகின்றேன் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -