சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது.
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்குள்ள ரீடெயில் ஸ்டோரொன்றை அப்பிள் நிறுவனம் மூடியுள்ளது. இதனை அப்பிளின் CEO டிம் குக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் அங்குள்ள அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. வேலை நிமித்தமாக சீனாவுக்கு செல்லும் அப்பிள் நிறுவன ஊழியர்களுக்கும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்பிளின் பொருளை விற்கும் மற்ற கடைகளின் முன் கதவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், சில கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் வுஹான் நகரில் அப்பிள் சாதனங்களின் விற்பனை குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.