பிரதமரினால் 1.2.2020 குருநாகலில் 14,022 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்


அஸ்ரப் ஏ சமத்-
புதிய அரசினால் ”ஊருக்கு நிழல் நாட்டுக்கு கிராமம்” எனும் திட்டத்தின் கீழ் ஒரு கிராம சேவகா் பிரிவிற்கு ஒரு வீடு என்ற வீடமைப்பு அமைச்சின் 60 நாட்களுக்குள் 14,022 வீடுகள்.நிர்மாணிக்கும் திட்டம் 01.02.2020 குருநாகலில் கிரிகவேதியில் பிரதமரும் வீடமைப்பு நகர அபிவிருத்தி நீர்விநியோக கலாச்சார அமைச்சா் மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படும் . நாட்டில் உள்ள சகல கிராமசேவகர் பிரிவுக்கும் ஒரு வீடு என்ற அடிப்படையில் 24 மாவட்டங்களிலும் வீடுகள் நிர்மாணிக்க்பபடும். இந் நிகழ்வில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்த மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பேரேராவும் கலந்து கொள்வாா்.

இதற்காக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கிராம சேவகா் , பிரதேச செயலாளா் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளா்களினால் தெரிபு செய்யப்பட்டு அரசினால் மாணியமாக 6 இலட்சம் ருபா ஒரு வீட்டை நிர்மாணிக்க கட்டம் கட்டமாக வழங்கப்படும். 550 சதுர அடி கொண்ட ஒரு வீடு 60 நாட்களுக்குள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். இதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கிராமங்கள் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் 8413.2 மில்லியன் ருபாவை வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கிட்டுள்ளாா்.. 2020 ஆரம்பிக்கும் இப் புதிய அபிவிருத்தித் திட்டமாகும் 2011ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டு அறிக்கையின் படி . இலங்கையில் குறைந்த வருமானம் பெரும் 455,000 வீடுகள் அற்ற குடும்பங்கள் உள்ளன. அரைவாசியில் நிர்மாணிக்கப்பட்ட 534,000 வீடுகள் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -